Shanmugan Murugavel / 2022 ஜனவரி 31 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்

வடமராட்சி மீனவர்கள் கடற்தொழலுக்கு செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மீனவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கபட்டுள்ளது. அதனை கண்டித்து மீனவர்கள் இன்று சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் வீதியை மறித்து பந்தல்களை போட்டு போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை முதல் தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் கடற்தொழிலுக்கு செல்லப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஏனைய பிரதேச மீனவர்களும் தமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தொழில் புறக்கணிப்பில் ஈடுபடுமாறு வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago