Princiya Dixci / 2020 நவம்பர் 29 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த் , என்.ராஜ்
யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவிதத் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர்களுக்கு, இன்று (30) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசத்தை மாத்திரம் முடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனினும், அது தொடர்பில் இதுவரையில், எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago