2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூதாட்டி மீது தாக்குதல்

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த மூதாட்டி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (05) இரவு புகுந்த கும்பலே தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

முகங்களை மூடி கட்டியவாறு வீட்டினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X