Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
நல்லூர் பிரதேச சபையால், வலி-கிழக்குக் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் மலக்கழிவுகளால், மேய்ச்சல் தரவைகளும் நீர் நிலைகளும் பாதிக்கப்படுவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதிகளவான விசாயிகளையும் விவசாய நிலப்பரப்புகளையும் கொண்ட கோப்பாய் பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட நீர்வேலி மேய்ச்சல் தரவைப் பகுதிகளிலேயே, நல்லூர் பிரதேச சபையால் மலக்கழிவுகள், உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த மலக்கழிவுகளை அகற்றுவதற்காக, வர்த்தக நிலைங்கள், நட்சத்திர விடுதிகள்,வீடுகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றிடமிருந்து, நல்லூரி பிரதேச சபையால் பணம் அறவிடப்பட்டாலும், பொறுத்தமற்ற கழிவகற்றல் முறைமையை பின்பற்றி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நன்னீர் வளமுள்ள வலி-கிழக்கு பிரதேசத்தின் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நோக்கோடு, நல்லூர் பிரதேச சபை செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், இது தொடர்பில் கவனம் செலுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
40 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago