2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Janu   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறான திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.மன்னார் பெரியகடை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சந்தியோகு  (வயது 72)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் சாப்பாடு வாங்குவதற்காக, தனது வீட்டிலிருந்து கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மத்திய கோட்டினை தாண்டி முதியவரது சைக்கிளுடன் மோதி உள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மன்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 பு.கஜிந்தன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X