2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முத்தான வியர்வை-2015

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச செயலகத்தின் அனுசரனையுடன் 'முத்தான வியர்வை-2015' விற்பனைச் சந்தை, செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை வளாகத்தில் ஆரம்பமானது.

குறித்த விற்பனைச் சந்தையினை திவிநெகும திட்டத்தின் மாவட்ட பணிப்பாளர் சசிதரன், மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் மற்றும் திவிநெகும திட்ட அலுவலகர்கள் இணைந்து, வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மலிவு விற்பனை இடம்பெற்றதுடன் குறித்த சந்தையில் உள்ளூர் உற்பத்திகள், மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X