2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்துக்கு ஒன்றுகூடல் மண்டபம் தேவை

Gavitha   / 2015 நவம்பர் 05 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் தேசிய பாடசாலையான முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு  ஒன்றுகூடல் மண்டபத்தை அமைத்து தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

750 மாணவர்கள் கல்விபயிலும் இப்பாடசாலையில்,  மீள்குடியேற்றத்தின் பின்னர் வகுப்பறைக் கட்டட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்வை  நடாத்தக்கூடிய மண்டப வசதி இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இதன் காரணமாக பாடசாலையின் சகல நிகழ்வுகளும் பாடசாலை உருவாக்கப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட பழைய கட்டடத்திலேயே நிகழ்த்தப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய பாடசாலையொன்றில் ஒன்றுகூடல் மண்டபகல்விப் பணிப்பாளரிடமும் பூநகரி கோட்டக்கல்விப் பணிப்பாளரிடமும் தொடர்ச்சியாக முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .