2025 மே 15, வியாழக்கிழமை

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரணை அமைக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சாரதிகளாலும் சபைக் காப்பாளர்களாலும், ,இன்று (29), கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தாம் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும்,  இதனை   இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லையெனவும், போராட்டக்கார்ரகள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், இங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்கள் செயலிழந்த நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இதனால் பஸ் நிலையத்துக்குள்  இடம்பெறும் சமூகவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமெனவும், வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .