Freelancer / 2022 மார்ச் 09 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
பருந்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதியை, அடையாளம் தெரியாத நபர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பருத்தித்துறை 4 ம் குறுக்கு வீதியை சேர்ந்த வேலு ஜஸ்டின் ராஜ் (45) நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இதன்போது இரண்டு இளைஞர்கள் சிறுப்பிட்டி மற்றும் நீர்வேலிப் பகுதியில் ஏறியுள்ளனர்.
கோப்பாய் சந்தியை பேருந்து நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது, வாள் ஒன்றினை எடுத்து இளைஞன் சாரதியின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
பின்னர் இருவரும் தப்பி சென்றுள்ளனர். இவர்கள் பிரிதொரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. விரிவான விசாரணைகளை கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
23 minute ago
28 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
53 minute ago