Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 மார்ச் 07 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகளுக்கு வந்தவரின் 14 பவுன் நகையும் 2,500 பவுண்ட் வெளிநாட்டு நாணயத்தாளும் திருடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த குறித்த பெண் தனது 12 பவுன் தாலிக்கொடி , 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் அதனுடன் இணைந்த 2,500 பவுன்ஸ் வெளிநாட்டு நாணயத்தாள் என்பவற்றை பிரத்தியேகமான இடம் ஒன்றில் வைத்துள்ளார்.
இன்று அதிகாலை நகை, பணத்தை எடுக்க முற்பட்டபோது அவை திருட்டுப்போனமை தெரியவந்துள்ளது.
இதன் போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு திருட்டு போனமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த பெண் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago