Freelancer / 2022 ஜூலை 07 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தனர்.
இயற்கை அனர்த்தங்கள் உருவாகும் போது எமது உதவியை மாவட்ட செயலகத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தற்போது எம்மை கைவிட்டுள்ளனர்.
நாம் எமக்கு டீசலை பெற்று தரக்கோரி பல தடவை கோரிக்கை விடுத்தும் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து நம்மால் வெதுப்பாக உற்பத்திகளை செய்ய முடியாது. கறுப்புச் சந்தையில் டீசலைப் பெற்று மக்களுக்கு வெதுப்பக உற்பத்திகளை வழங்க முடியாது.
இறுதியாக நாம் டீசலை பெற்றுதரக்கோரி இராணுவத்தினரின் உதவியை நாடவிருக்கின்றோம் என்றார். (R)

29 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago