Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 08 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் பிரதேசத்தில், பிறந்து ஒரு மாதத்துக்குட்பட்ட மூன்று சிசுக்கள் உள்ளிட்ட 5 சிசுக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறந்து 12 நாள்களேயான சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாள்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த சிசு ஒன்றுக்கும் தாய்க்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையின் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாள்களேயான சிசுவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, இளவாலை பகுதியை சேர்ந்த 09 மாத சிசுவுக்கும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 10 மாத சிசுவுக்கும் பெற்றோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago