2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

யாழில் 67 வயதுடைய நபர் கைது

Freelancer   / 2022 மார்ச் 03 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன் 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் சட்டவிரோதமாக கடற்சங்குகளை வைத்திருந்த 67 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 160 கடற்சங்குகள் மீட்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .