Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செந்தூரன் பிரதீபன், எம். றொசாந்த், எஸ். நிதர்ஷன்

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.
நல்லூர் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் ஆரியகுளம் நாகவிகாரைக்குச் சென்று வழிபட்டார்.
அவருடன் நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
பருத்தித்துறையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட மாநாடு நேற்று இடம்பெற்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பலரும் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago