2025 மே 17, சனிக்கிழமை

‘யாழ்ப்பாணத்தில் நுதனமுறையில் அலைபேசிகள் அபகரிப்பு’

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீப்

யாழ்ப்பாணத்தில், தற்போது நூதனமுறையில், வழிப்பறி கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் சிறுகுற்றத்தடுப்புப் பொலிஸார், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், குறிப்பாக இளைஞர்கள் விழிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து தொடர்ந்துரைத்த பொலிஸார், வீதி வழியே மோட்டார் சைக்கிளில் வரும் குழுவினர், அவர்கள் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களை மறித்து, “எனது சகோதரியைப் புகைப்படம் எடுத்தாயா? அந்த புகைப்படம் உனது அலைபேசியில் இருகிறது” எனக் கூறி, அலைபேசியை வாங்கி பார்த்துக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தனர்.

பின்னர், வீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரம் பார்த்து, வாங்கிய அலைபேசியை அபகரித்துக்கொண்டு தப்பி செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், 90க்கும் அதிகமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இந்தக் கொள்ளைச்சம்பவம் தொடர்பில், இளைஞர்கள் விழிப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வீதியில் சந்தேகத்துக்கிடமானமுறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பிலும் அவர்கள் செலுத்தி வரும் வாகனத் தகடு இலக்கத்தையும் குறிப்பெடுத்து, அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு வழங்குமாறும், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .