2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில்

Freelancer   / 2025 மார்ச் 11 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளையில் நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூபர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டுக்கு இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில்  நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் சமரசம் பேசச் சென்றபோது, அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் யூடியூபரையும் மேலும் மூவரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைகளின் பின்னர்,  நால்வரையும் விளக்கமறியலில் வைக்கவும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது விசாரணை நடத்தி கைது செய்யவும் மன்று உத்தரவிட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X