Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்
தற்போதைய நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லையென, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், எழுமாறான பிசிஆர் பரிசோதனைகளின் பிரகாரம், திங்கட்கிழமை (26), 13 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதென்றார்.
இதேவேளை, கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 491 தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், அதற்கான நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கும் அக்கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் கூறினார்.
வழிபாட்டு இடங்களில், 50 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு இடங்களில், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லையெனச் சாடிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
எனவே, கோவில்களில் 50 பேருக்கும் மேற்பட்ட ஒன்றுகூடல்களை, பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், வழிபாட்டு இடங்களில், இறுக்கமான நடைமுறையை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானதெனவும் வலியுறுத்தினார்.
ஏனைய மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால் அவ்வாறாதொரு நிலைமை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க இன்னும் ஏற்படவில்லையெனவும் அவ்வாறானதொரு நிலை ஏற்படும் போது, நிச்சயமாக முடக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாமெனவும் கூறினார்.
தற்போதைய நிலையில், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லையெனவத் தெரிவித்த அவர், பொதுமக்கள் ஒன்றுகூடல்களைத் தவிர்த்து பாதுகாப்பாக நடந்து கொண்டால், இவ்வாறான அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாமெனவும் கூறினார்.
எனவே, எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது மிக அவசியமெனவும், க.மகேசன் தெரிவித்தார்.
22 minute ago
44 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
44 minute ago
46 minute ago