Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், டி.விஜித்தா
யாழ். - கொழும்பு ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதான அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தின் பின்னர், தற்போதுள்ள ரயில் சேவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மார்ச் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தனவெனவும் கடந்த மாதம் மீண்டும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டமைத் தொடர்ந்து, தற்போது வழமையான ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றனவெனவும் கூறினார்.
அத்துடன், கடந்த நாள்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த நகர் சேர் கடுகதி ரயில் சேவை, இம்மாதம் 29, 30, 31, செப்டெம்பர் 1ஆம் திகதிகளில், பரீட்சார்த்தமான சேவையை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதெனவும், அவர் தெரிவித்தார்.
எனவே, பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசனப் பதிவுகளை, யாழ். ரயில் நிலையத்தில் மேற்கொள்ள முடியுமெனவும், பிரதீபன் தெரிவித்தார்.
5 minute ago
21 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
27 minute ago
43 minute ago