Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 08 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், கலைமாணி (மொழிபெயர்புக் கற்கைகள்) மற்றும் உடற்கல்வி விஞ்ஞானமானி ஆகிய கற்கை நெறிகளுக்காக 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டில் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான நுண்ணறிவுப் பரீட்சைகளை, அடுத்த வாரம் முதல் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாணி (மொழிபெயர்புக் கற்கைகள்) தெரிவுக்கான நுண்ணறிவுப் பரீட்சை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதியும், உடற்கல்வி விஞ்ஞானமானி ஆகிய கற்கை நெறி தெரிவுக்கான நுண்ணறிவுப் பரீட்சை எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதியும் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கலைமாணி (மொழிபெயர்புக் கற்கைகள்) கற்கை நெறிக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 1,590 பேர், தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 360 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை.
அத்துடன், உடற்கல்வி விஞ்ஞானமானி கற்கை நெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 417 பேர், தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 49 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை.
தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளவர்களின் விவரங்களை www.jfn.ac.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.
தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்று, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்கள், தங்களது விண்ணப்பக் கட்டணம் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை, மின்னஞ்சல் மூலமாக அனுமதிகள் கிளைக்கு அனுப்பி வைக்குமாறும், கட்டணம் செலுத்தியமையை உறுதிப்படுத்தத் தவறுபவர்களுக்குப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025