Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2020 நவம்பர் 04 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
போதிய சந்தை வாய்ப்பின்மையால், யாழ்.மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என, கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குடாக்கடலில் கடற்றொழிலுக்குச் செல்லும் 50 சதவீதமான மீனவர்கள், தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர் என்றும் கொரோனோ தொற்றுக் காரணமாக தென்பகுதிக்கு, கடலுணவு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், தங்களால் பிடிபடும் கடலுணவுகள், போதிய சந்தை வாய்ப்பின்றி தேங்கி காணப்படுவதாலும் தொழிலுக்கு செல்வதை, மீனவர்கள் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
தென்பகுதியில் மீன் சந்தையில் இருந்து, கொரோனோ தொற்று ஏற்பட்டமையால், மக்கள் கடலுணவைக் கொள்வனவு செய்ய தயக்கம் காட்டி வருவதனாலும் உள்ளூர் சந்தைகளில் கடலுணவுக்கான கேள்வியும் குறைவடைந்துள்ளமையால், சந்தைகளில் விற்பனை குறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான காரணங்களால், தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் விரும்பாது தவிர்த்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago