Niroshini / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், பயிற்சிக்கான சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம், யாழ்ப்பாணத்தில், இன்று (23) முன்னெடுக்கப்பட்டதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காலபோகத்தில், கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நெற்செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை தாங்களே உற்பத்தி செய்ய வேண்டிய கடப்பாடு விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய, விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதற்கமைய, விழிப்புணர்வு வாகனப் பேரணியொன்று, இன்று (23) முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த வாகனப் பேரணியானது, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு, சண்டிலிப்பாய், உடுவில், சங்கானை விவசாய போதனாசிரியர் பிரிவுகள் ஊடாக செல்லவுள்ளதெனவும் கூறினார்.
இந்த வாகன பேரணி ஊடாக விவசாயிகளுக்கு சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, இந்த வாகனப் பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் சேதன பசளை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது எனவும், அஞ்சலாதேவி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.
34 minute ago
39 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
4 hours ago