Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2022 மார்ச் 03 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வடக்கில் எதிர்வரும் நாள்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும், வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இதனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமான மற்றும் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
“எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
“தற்போதைய நிலைமைகளின் படி இதன் மிகச் சரியான நகர்வுப் பாதையை கணிக்க முடியாதுள்ளது. எனினும், சில மாதிரிகள் இந்த தாழமுக்கம் வடக்கு மாகாணத்தின் கரையோரத்தை அணமித்தே நகரும் என காட்டுகின்றன.
“அவ்வாறாயின் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் வேகமான காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழையைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
“குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளை விட யாழ்ப்பாண மாவட்டம் சற்று கூடுதலான அளவு மழையைப் பெற வாய்ப்புள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago