Freelancer / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
வடக்கு அரச அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுமே அல்லாமல் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்,
“வட மாகாணத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் மீது யாராவது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைத்தால் மாகாண ஆளுநர் என்ற நீதியில் ஒழுக்கற்று விசாரணை மேற்கொள்ளப்படும்.
விசாரணையின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது தண்டனை அல்லது சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படும்.
அரச உத்தியோகத்தர்கள் சேவையின் நிமிர்த்தம் இடமாற்றத்திற்கு உரித்துடையவர்கள். அவர்களின் இடமாற்றம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் விசேட சேவை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்.
மாகாண இடமாற்றங்கள் நியமனங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுமே அல்லாமல் ஒழுக்காற்று விசாரணையால் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாது.
ஆளுநரால் மேற்கொள்ளப்படும் அதி விசேட சிறப்பு தர அதிகாரிகளின் நியமனத்தை ஆளுநரால் திரும்ப பெற முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)
13 minute ago
23 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
43 minute ago