Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2021 மார்ச் 19 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
வடக்கு மாகாண அபிவிருத்தித் தொடர்பில் அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாகத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, 'சுபிட்சத்தை நோக்கு' என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், வட பகுதியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வடமாகாணத்தில் மேற்கொண்டுள்ளதாகவும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும் 2010க்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா முடக்கக் காலத்திலும்கூட தபால் சேவையானது மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது என்றும் தபால் ஊழியர்கள் தமது கடமையை சிறப்பாக செய்தார்கள் என்றும் அவர்களை இவ்வேளையில் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரை விவசாயம், கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளே மிகமுக்கியமான துறைகளாகக் காணப்படுகின்றன என்றும் அத்துடன் அந்தத் துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற் குறிப்பிட்ட துறைகளை ஒன்றிணைத்து முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது இந்த தபால்துறை என்றும் ஓர் இணைப்புக் கருவியாகவே தான் தபால்துறையைக் காண்பதாகவும் தெரிவித்தார்.
தபால் துறையை நவீனப்படுத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் 224 வருடங்கள் பழமை வாய்ந்த தபால் துறையை நவீனமயப்படுத்தி தபால் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயற்படுத்தல் தொடர்பில் ஆராயவதாகவும் உலக நாடுகளில் உள்ள தபால் துறையைப்போன்று நமது நாட்டிலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட வகையில் எமது நாட்டின் தபால் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகம் தெரிவித்தார்.
வடபகுதியை அபிவிருத்திச் செய்வதற்கு வடக்கிலுள்ள எமது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வடபகுதியை அபிவிருத்திச் செய்வதற்கு தாம் எப்போதும் ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago