Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
யாழ்ப்பாணம் - வடமராட்சி களப்பு குடிநீர்த் திட்டத்தின் பரீட்சார்த்த நிகழ்வு, நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம், தென்மராட்சி - சரசாலை வடக்கில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீரியல்வள அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மேலதிகச் செயலாளர் முரளி, நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கான அடிக்கல்லை, கடந்தாண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago