2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வட்டுவாகல் பாலத்தை மீளமைக்க 1200 மில்லியன் ரூபாய் தேவை

Sudharshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தை மீள அமைப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் தேவையென கணக்கிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (07) மாலை இடம்பெற்றது. இதன்போதே மாவட்டச் செயலர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்ட சுமார் 200 மீற்றர் நீளமான இந்தப் பாலம், பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளது. யுத்தத்தில் சேதமடைந்த இந்தப் பாலத்தில் சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் பிரயாணம் செய்யக்கூடிய அளவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால், கடந்த மாதம் பெய்த கடும்மழை காரணமாக வான் வெள்ளம் இந்தப் பாலத்தினூடாக பாய்;ந்தமையால் பாலம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தை உடனடியாகத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

'வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள இந்தப் பாலத்தை மீள அமைப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் தேவையென அதிகார சபை மதிப்பீடு செய்து எங்களுக்கு கூறியுள்ளது. நிதி கிடைக்கப்பெற்றால் பாலம் அமைக்கும் பணி ஆரம்பமாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .