2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், இன்று (24) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

“கடந்த 21.01.2022 அன்று அமைச்சால் கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் 60 தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளார்கள் என்றும் அவர்களது நியமனம் தொடர்பாக ஆராயுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆனால், வடக்கு மாகாணத்தில் 210 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளோம். 60 தொண்டர் ஆசிரியர்கள் எனக் கடிதத்தில் வந்துள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தை வினவிய போது, அவர்கள் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

“நாங்கள் இது தொடர்பாக அமைச்சினை வினவியபோது, வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய பெயர் விவரங்களின் அடிப்படையிலேயே குறித்த கடிதத்தை தாங்கள் அனுப்பியதாகத் தெரிவிக்கின்றனர்.

“எனவே, மிகுதி 110 பேரின் பெயர்களும் அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். அத்தோடு,  உரிய அதிகாரிகள் எமது நிலையை கருத்தில்கொண்டு, எமக்கான நியமனத்துக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கோரியே, நாங்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X