Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ், நிதர்ஷன் வினோத்
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை, தவிசாளார் சோ.சுகிர்தனால் சபையில் இன்று (30) முன்வைக்கப்பட்டது.
39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், நிதியறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 30 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் ஒருவர் உட்பட 4 பேர் சபைக்கு சமூகமில்லை. இரண்டு உறுப்பினர்கள் கட்சிகளால் நியமிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அகில தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago