Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், கடந்த 7 நாள்களில் 6 பேர் மரணித்துள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் க.ராகுலன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரகாலத்தில் நோய் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றாளர்கள் 184 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாகவும் 8 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளனர்.
“தற்போது 70 இற்கும் மேலான கொரோனா நோயாளிகள், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“இவ்வாறான சூழலில், சுகாதார அறிவுறுத்தல்களை மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது தமதும் தாம் சார்ந்த சமூகத்தினதும் பாதுகாப்புக்கு இன்றியமையாததாகும்” என்றார்.
36 minute ago
41 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
4 hours ago