Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் நடக்கும் போது அவ்விடத்தில் நின்ற ரசலிங்கம் பொன்னம்பலம் என்பவரின் வீட்டுக்கு இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை எரிபொருள் நிரப்ப வந்த இரு இளைஞர்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , பணியாளர்களுக்கு வாளினை காட்டி மிரட்டியும் உள்ளனர்.
சம்பவத்தினை அடுத்து இரு இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெறும் போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த உரிமையாளரின் உறவினரின் வீட்டினுள் இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளது.
வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)
6 minute ago
10 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
34 minute ago
38 minute ago