Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில்.கொள்ளையர்கள் இருவர் விபத்தை ஏற்படுத்தி பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துத் தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழில். இருந்து அராலி நோக்கி அராலி வீதி வழியாக இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் நேற்று (12) சென்று கொண்டிருந்த போது, தமது முகத்தை மறைத்து துணிகட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு கொள்ளையர்கள், பெண்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர்.
விபத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் எழுந்து விபத்தினை ஏற்படுத்திய கொள்ளையர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, திடீரென கொள்ளையர்கள் பெண்ணொருவர் அணிந்திருந்த தாலி கொடியினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
5 hours ago