Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் மேற்கொள்வோர், 2020ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இப்பிரதேச எல்லைக்குள் வியாபாரம் செய்வோர், நடமாடும் வாகன வியாபாரம், ஓட்டோ தரிப்பிட அனுமதி, தமது பிரதேசத்துக்குள் பொருள்களை விநியோகிப்போர், 2020ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்று, அதனைப் பூரணப்படுத்தி, உப அலுவலகங்களில் சமர்பித்து, உரிய கட்டணங்களை மார்ச் 31ஆம் திகதிக்குள் செலுத்தி, 2020ஆம் ஆண்டுக்குரிய வியாபார அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago