Freelancer / 2022 ஜூலை 01 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கர்
கிளிநொச்சியில் கடந்த காலங்களில் பழைய இரும்புக்காக விற்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரி பாகங்களை தற்போது மக்கள் முண்டியடித்து வாங்குவதை காணக் கூடியதாக உள்ளது.
கடந்த காலங்களில் துவிச்சக்கர வண்டிகளை மக்கள் தங்களுடைய போக்குவரத்துகளுக்கு பயன்படுத்தி இருந்தாலும், நாளடைவில் அவற்றை கைவிட்டு, பழுதடைந்த நிலையிலும் ஓரளவு நல்ல நிலையிலும் காணப்பட்ட வண்டிகள் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை, மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகளவானோர் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.
இந்த நிலையில் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 70 ஆயிரம் ரூபாவை தாண்டிய நிலையில் தற்போது கிளிநொச்சியில் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் வண்டி உதிரி பாகங்களையும் மக்கள் முன்டியடித்து கொள்வனவு செய்கின்ற நிலைமை காணப்படுகிறது. (R)
27 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago