2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் இருந்து நகைகள் கொள்ளை

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

 

காலையில், வீடொன்றை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்ற சம்பவமொன்று, மாதகல் - நாவலர் வீதியில், நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர், காலையில் கோவிலுக்குச் சென்றிருந்த போதே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் நகரில், சந்தேகத்துக்கி​டமான முறையில் நடமாடிய நபரொருவரை, இளவாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து, திருட்டுப் போன நகைகள் சிலவும் 37 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X