Freelancer / 2022 ஜூன் 03 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
வடமராட்சி - கரணவாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று காலை கரணவாய் மண்டாண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில், கரணவாய் பகுதியை சேர்ந்த பானுஜன் வயது 17 என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago