Princiya Dixci / 2021 மார்ச் 28 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - புத்தூர், வீரவாணி பகுதியில், தனிமையில் வசித்த குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்
7 பிள்ளைகளின் தந்தையான துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே, இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை 1 மணியளவில், அவரது வீட்டுக்கு அருகில் வைத்து, இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருடன் இருந்த பழைய பகையை வைத்தே சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, பொலிஸார் மேலும் கூறினர்.
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago