Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு சிகரெட் பக்கற்றுக்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் திடீர் தேடுதலை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர், அங்கிருந்து 5 வெளிநாட்டு சிகரெட் பக்கற்றுக்களை மீட்டனர்.
அதனை தனது உடமையில் வைத்திருந்தார் என்று உணவக உரிமையாளரைப் பொலிஸ் சிறப்புப் பிரிவினர் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன், அவரிடம் கைப்பற்றப்பட்ட சிகரெட் பக்கற்றுக்களையும் கையளித்தனர்.
உணவக உரிமையாளர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
17 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
33 minute ago
48 minute ago