2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

233 சிறிய குளங்கள் புனரமைக்க வேண்டியுள்ளது

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 233 சிறிய குளங்களைப் புனரமைப்பதற்கு, நிதி பற்றாக்குறையாக உள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட கமநல உதவி ஆணையாளர் இ.தயாரூபன் திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 397 சிறிய குளங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் புனரமைக்க வேண்டிய நிலையிலேயே இருந்தன. பின்னர், நிதியுதவி கிடைக்கப்பெற்று இவற்றில் 164 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மீதமுள்ள குளங்களை புனரமைப்பதற்கு, நிதி இல்லாது இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய குளங்கள், விவசாயிகளின் பயிர்ச் செய்கைக்கு பெரிதும் உதவி புரிவதுடன், குளம் அமைந்துள்ள பகுதிக்கான நிலக்கீழ் நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும் இவை அமைந்துள்ளன. புனரமைக்கப்படாமல் இருந்த சிறிய குளங்கள், அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரிதும் சேதமடைந்துள்ளன. இதனால், புனரமைக்கப்படாத குளங்களை விரைந்து புனரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .