2025 ஜூலை 28, திங்கட்கிழமை

சூழலைப் பாதுகாக்கும் சட்ட அமுலாக்கம் அவசியம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

சூழலைப் பாதுகாக்க சட்ட அமுலாக்கம் அவசியமானதென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது சுற்றாடலை பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை எவருமே கடைப்பிடிப்பதில்லை. சட்டங்களை கடைப்பிடிப்பதன் ஊடாகத்தான் சூழலை பாதுகாக்க முடியும். சூழல் பிரச்சனைகளையும் தீர்வு காண முடியும்.

அதனடிப்படையில் சூழலைப் பாதுகாக்கின்ற சட்டங்கள் அவசியமாகின்றன. இயற்கையுடன் தொடர்புடைய சுற்றாடலை பாதுகாக்க வேண்டும். மண் அகழ்வு, மரங்களை வெட்டுதல், இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள், இயற்கையாக கிடைக்கின்ற சூழலை பாதுகாக்க வேண்டும். மரம் வெட்டுதல், சட்டவிரோத மணல் அகழ்வுகள் தற்போது எமது மாவட்டத்தில் குறைந்துள்ள போதிலும் முழுமையாக அவை நிறுத்தப்படவேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .