2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமான மதுபான விற்பனையால் யாழில் 12 லட்சம் ரூபா வசூல்

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மதுபான உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் 12 லட்சத்தி 37 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என். கிருபாகரன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக சுமார் 404 வழக்குகள் யாழ். மதுவரி நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான கால பகுதியில் சுமார் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத மதுபான விற்பனை, கள்ளு விற்பனை, 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட், பீடி விற்பனை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை நீதிமன்றில் ஆஜப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளின் மூலமே சுமார் 12 லடத்தி 37 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X