Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் இந்த வருடத்தில் 12 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு உட்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், விலங்கு விசரினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் யாழ்.பிராந்திய விலங்கு விசர் நோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி கே.வர்ணநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் விலங்கு விசர் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதியளவில் இல்லை எனவும் இதன் காரணமாக விலங்கு விசர் நோய்க்கு பெரும்பாலான மக்கள் உள்ளாகுவதாகவும் இது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 28ஆம் திகதி உலக விலங்கு விசர் தினமாகும். அன்றைய தினம் மக்களுக்கு விலங்கு விசர் நோய்தாக்கம் தொடர்பான கருத்துரைகளும், விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் விலங்கு விசர் பற்றி தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago