2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடற்றொழிலாளர் மாநாட்டிற்கு யாழிலிருந்து 200பேர் பங்கேற்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள 'கடற்றொழில் சமேளனத்தின் தேசிய மாநாட்டில்' யாழ்.மாவட்டம் சார்பாக 200பேர் கலந்து கொள்ளவுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாக்கிழமை (06) தெரிவித்தார்.

இந்த மாநாடு வருடா வருடம் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது. கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மீனவ சங்க தலைவர்கள், செயலாளர்கள், மற்றும் அங்கத்தவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முன்னைய வருடங்களை விட இம்முறையே யாழ்.மாவட்டத்திலிருந்து அதிகளவானவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் தொடர்பிலான பெயர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .