2025 மே 19, திங்கட்கிழமை

கிளாலி பிரதேச மக்கள் 26 ஆம் திகதி மீள்குடியேற்றம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
கிளாலி பிரதேச மக்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி தமது சொந்த இடங்களில் மீள்குயேற்றப்படவுள்ளதாக பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்

கிளாலி 95 பிரிவு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு மேற்குப் பகுதியிலுள்ள காணிகளில் மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதனால் எதிர்வுரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பொதுமக்களை வருகை தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

இந்தப் பிரதேசத்தில் மக்களை மீள் குடியேற்றம் செய்யும் போது அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக விவசாய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் த.முகுந்தன் மேலும் தெரிவித்துள்ளார்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X