2025 மே 19, திங்கட்கிழமை

புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட 3 இந்திய வியாபாரிகள் கைது

Super User   / 2012 ஜூலை 24 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 3 இந்திய வியாபாரிகள் இளவாளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

விசா முடிவடைந்த நிலையில் இளவாளை பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதே இவர்கள் மூன்று பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 3 இந்திய வியாபாரிகள் தொடர்பான தகவல் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை இவர்கள் மூன்று பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி, பின்னர் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களத்திடம் கையளிக்குமாறும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X