2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கிற்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்: பசில் ராஜபக்ஷ

Menaka Mookandi   / 2012 ஜூலை 20 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணம் முழுவதற்கும் முழுமையான மின்சாரத்தினை வழங்குவதற்கு தேசிய மின் விநியோக திட்டத்தினை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் வடபகுதி முழுவதும் மிக விரைவில் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்குமென்று தான் நம்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் பனை ஆராய்ச்சி நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

குடா நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதை நாங்கள் அறிவோம் இன்றும் இதற்கான வேலைத்திட்டங்கள் தற்பொது நடைபெற்று வருகின்றது வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கும் கிளிநொச்சியில் இருந்து சுன்னாகத்திற்குமான தேசிய மின்வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடபகுதியில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலோடு பனை வளம் பின்னிப் பிணைந்துள்ளதால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பனை மரங்களை நடுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு இணங்க பருவ மழைக்கு முன்னரான காலப்பகுதியில் பாரிய அளவில் பனை மரங்களை நடுகை பண்ணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கப்படடிருந்தது.

அத்துடன் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பனை மரத்தில் இருந்த உற்பத்தி செய்கின்ற பொருட்களை தரம் வாய்ந்த பொருட்களாக மாற்றுவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக பனை சார் உற்பத்தி பொருட்களுக்கான சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேவை ஏற்பட்டது என்றார்.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் புனரமைப்பக்காக திறைசேரியில் 44 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது இதற்கான மேலதிகமான நிதியினையும் பல்வேறு தொழில் நுட்ப உதவிகளையும் இந்திய வழங்கியுள்ளது அத்துடன் இலங்கையில் எங்கும் இல்லாத வகையில் புதிய ஆராய்ச்சி உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த உதவிகளுக்காக இலங்கை மக்கள் சார்பாகவும், குறிப்பாக வடபகுதி மக்கள் சார்பாகவும் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து அபிவிருத்திகளுக்கும் இந்திய அரசாங்கம வழங்கி வருகின்ற உதவிகளை  எங்களால் மறக்க முடியாது.

யுத்தம் நடந்த காலப்பகுதியில் காயமடைந்த மக்களுக்கான மருத்துவ உதவிகளையும் யுத்தத்திற்கு பின்னரான மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றவற்றிற்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த பனை ஆராய்ச்சி நிறுவன்தைச் சார்ந்தவர்கள் இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X