2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஏ – 9 வீதியில் விபத்துக்கள் குறைவு

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

கடந்த ஒரு மாத காலத்தில் ஏ – 9 வீதியில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வியாழக்கிழமை (31) தெரிவித்தார்.

அதற்கு, வாகன சாரதிகளுக்கு இடையூறு இல்லாத விதத்தில் போக்குவரத்துப் பொலிஸார் கண்காணிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றமையே காரணம் எனவும்  அவர் தெரிவித்தார்.

புதிதாக வழங்கப்பட்டுள்ள 600 சிசி மோட்டார் சைக்கிள்கள் மூலமான பொலிஸாரின் கடமைகள் எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளது என்பது தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த ஒரு மாத காலத்தில் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரைக்கும் போக்குவரத்துப் பொலிஸாரோ ஏனைய பொலிஸாரோ வீதிக் கடமையில் பகிரங்கமாக ஈடுபடுவதில்லை.

ஆனால் விசேடமாக அமைக்கப்பட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு வீதிக்கடமைகளை, புதிய வேகம் கூடிய மோட்டார் சைக்கிள்களின் உதவியுடன் கண்காணித்து வருகின்றார்கள்.

இந்தப் பொலிஸ் குழுவானது, வீதி ஒழுங்கு முறைகள் உரிய முறையில் வாகன சாரதிகளினால் கடைப்பிடிக்கப்படுவதை அவதானிப்பதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள், கையடக்கத் தொலைபேசியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்துபவர்கள், அளவுக்கு மிஞ்சிய வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களை கண்காணித்து விபத்துக்களைக் குறைத்து வருகின்றனர்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .