2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட வாக்களர் பதிவு நடவடிக்கை ஓகஸ்ட் 15 திகதி வரை நீடிப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். மாவட்டத்தில் வாக்களர் பதிவு நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 15 திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

இந்த வாக்களர் அட்டை மீள் பதிவுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் பூரண ஒத்தழைப்பு இல்லாத காரணத்தாலேயே கால நீடிப்பு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் பதிவு நடவடிக்கையில் பொதுமக்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் ஏற்படும் பட்டசத்தில் யாழ். தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

அத்துடன் வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் அந்தந்த கிராம அலுவலர்களின் ஊடாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு  உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X