2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனைசெய்த கடை உரிமையாளர்கள் 17பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், ரஜினி)

யாழ்ப்பாண பிரதேசத்தில் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பீடி விற்பனை செய்தமை, தடைசெய்யப்பட்ட சிகரட் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் 17 பேர் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மதுவரித் திணைக்களத்தின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பிரகாரம் தலா 4000 வீதம் 72,000 ரூபா அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த கடை உரிமையாளர்கள் மீண்டும் இதே குற்றத்திற்காக கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என மன்றில் தெரிவித்தார் யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X