Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
வட மாகாணத்தில் யுத்தத்தின் போது பாதிப்படைந்த 180 கோயில்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த கால யுத்தத்தால் வடக்கில் பல கோயில்கள் சேதமடைந்துள்ளதுடன் அழிவடைந்தும் உள்ளன. இவற்றில் 180 கோயில்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மதங்கள் யாவும் மனிதனுக்கு வழிகாட்டுகின்றன. மத ஸ்தாபனங்கள் சிவில் சமூகத்தில் தனி மனிதர்களை மட்டுமன்றி நிறுவனங்களையம் கட்சிகளையும் நெறிப்படுத்த முடியும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல சேவைகளை முன்னெடுத்த கட்சியாகும் என்றார் அவர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கம்பளையிலுள்ள மத ஸ்தாபனங்களில் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், பௌத்த விகாரை, சென் அன்றூஸ் தேவாலயம் மற்றும் கம்பளை பள்ளிவாசல் ஆகியவற்றில் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இவற்றில் பிரதமர் டி.எம்.ஜயரட்னவும் கலந்துகொண்டார்.
meenavan Monday, 05 September 2011 09:56 PM
180 கோவில்களின் புனரமைப்புடன் புதிதாக எத்தனை பௌத்த விகாரைகள் உருவாகுமோ?
Reply : 0 0
aj Monday, 05 September 2011 11:13 PM
புத்த விகாரையா?
Reply : 0 0
Manithan Tuesday, 06 September 2011 08:19 AM
கோவில்கள் இருந்த இடத்தில் விகாரை கட்டமாட்டோம் சத்தியமாக. கோவில்களுக்கு சற்றுத்தொலைவில் தான் கட்டுவோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago