2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 19 பேர் விடுவிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், எஸ்.ஜெகநாதன்

காரைநகர் கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 19 பேரும் சட்டமா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் துணைத்தூதுவ அதிகாரி ஒருவர் புதன்கிழமை (30) தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழ்நாட்டின் புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணத்தினைச் சேர்ந்த 19 மீனவர்கள் காரைநகர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

19 மீனவர்களும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்படி மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி மேற்படி மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சட்டமா அதிபரின் விசேட உத்தரவிற்கிணங்க இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .